அண்ணன் கண் முன் கிணற்றில் மூழ்கி தம்பி சாவு

வத்திராயிருப்பு, மார்ச் 2: வத்திராயிருப்பு அருகே எஸ். கொடிக்குளம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு வினோத்பாண்டி (9), முத்துப்பாண்டி(7) உள்ளிட்ட மூன்று மகன்கள். நேற்று வினோத்பாண்டி, முத்துப்பாண்டி இருவரும் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக முத்துப்பாண்டி கிணற்றில் மூழ்கினான்.

இதைக் கண்டு அவனது அண்ணன், உறவினர்களிடம் சென்று தம்பி கிணற்றில் மூழ்கியது தெரிவித்துள்ளான். அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி முத்துப்பாண்டி உடலை சடலமாக மீட்டனர். கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்ணன் கண் முன் தம்பி உயிாிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>