அரசியல் கட்சியினருக்கு சிவகாசியில் 23 இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி

சிவகாசி, மார்ச் 2: சிவகாசி போலீஸ் உட்கோட்டத்தில் 23 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப். 6ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. சிவகாசி உட்கோட்ட பகுதியில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய 23 இடங்களில் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

அதன்படி சிவகாசி பஸ்ஸ்டாண்ட் அருகே, சிவகாசி பாவடிதோப்பு, சிவகாசி தேவர் சிலை, காரனேசன் முக்கு, திருத்தங்கல் குறுக்குப்பாதை தனியார் மைதானம், திருத்தங்கல் எஸ்.ஆர். பள்ளி எதிர்புறம், அம்பேத்கர் சிலை அருகே, பெரியார் சிலை அருகே, எஸ்.என்.புரம் பிள்ளையார் கோயில், விஸ்வநத்தம், சாட்சியாபுரம், எம்.துரைச்சாமிபுரம் பஸ் ஸ்டாப், மாரனேரி பஸ் ஸ்டாப், மம்சாபுரம் 4 முக்குரோடு, காக்கிவாடன்பட்டி பஸ் ஸ்டாப், விளாம்பட்டி பஜார், ஏ.துலக்கப்பட்டி, ஏ.லட்சுமியாபுரம், அம்பலார்மடம், நாரணாபுரம், மீனம்பட்டி, பள்ளபட்டி, எரிச்சநத்தம் மந்தை ஆகிய பகுதிகளில் மட்டுமே அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதுள்ளது.

பிரசாரம் செய்ய போலீசாரிடம் அரசியல் கட்சிகள் முன் அனுமதி பெற வேண்டும். பல்வேறு கட்சிகள் ஒரே இடத்தில் அனுமதி கேட்டால் , யார் முதலில் கேட்டுள்ளனரோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>