கஞ்சாவுடன் வாலிபர் கைது

கூடலூர், மார்ச் 2: தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில், கேரள கலால் சோதனைச்சாவடியில் அம்மாநில கலால்துறை இன்ஸ்பெக்டர் ஷைபு தலைமையில் போலீசார்கள் ராஜ்குமார், ரவி, சேவியர் பி.டி மற்றும் நதீர்.கே.சம்ஸ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமிழகத்திலிருந்து கேரள பகுதிக்கு நடந்து சென்ற வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.

அப்போது அவர் 115 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில், ‘வாலிபர் வெண்மணியைச் சேர்ந்த குமார் (28) என்பதும், கஞ்சாவை தமிழ்நாட்டிலிருந்து வாங்கிச் செல்வதும் தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் குமாரை கைது செய்தனர்.

Related Stories:

>