மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் அன்னதானம்

கம்பம், மார்ச் 2: தேனி தெற்கு மாவட்டம், கம்பம் நகர திமுக சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 68வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கம்பம் வள்ளலார் மடத்தில் ஆதரவற்ற ஏழைகளுக்கு இனிப்புடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அப்போது திமுக தலைவர் நீண்ட காலம் வாழ வேண்டும். தேர்தலில் வென்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என வேண்டிக்கொண்டனர். நிகழ்ச்சியில் நகரச்செயலாளர்கள் (வ) வக்கீல் துரைநெப்போலியன், (தெ) சூர்யா செல்வகுமார் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>