சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிவகங்கை, மார்ச் 2: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் இலவச லேப்டாப் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தற்போது இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களுக்கு, 2017-2018ம் ஆண்டு பிளஸ் 2 படித்த காலத்தில் இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்த கோரிக்கைகாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வந்தனர்.

கடந்த மாதம் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடத்திய போராட்டத்தின் போது ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து இலவச லேப்டாப் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேல் போராட்டம் நடத்திய பின்னர் வகுப்புகளை புறக்கணித்து கலைந்து சென்றனர்.

Related Stories:

>