முகவரி கேட்பது போல் நடித்து தொழிலாளியிடம் பணம் பறித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

நெல்லை, மே 18: பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சங்கர். கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் தனது நண்பருடன் வேலை நிமித்தமாக மேலப்பாளையம் குறிச்சிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் கொக்கிரகுளம் பழுவத்தியம்மன் கோயில் அருகே சென்றபோது, எதிரே ஒரு பைக்கில் 2 மர்ம நபர்கள் வந்தனர்.

அவர்கள் சங்கர் மற்றும் அவரது நண்பர் அருகே வந்ததும் பைக்கை நிறுத்தினர். பின்னர், பைக்கில் இருந்து வந்த ஒரு நபர் சங்கரிடம் முகவரி கேட்பது போல பேச்சுக்கொடுத்தார். அப்போது அந்த நபர் திடீரென தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சங்கரையும், அவரது நண்பரையும் மிரட்டினார். மேலும் சங்கரின் சட்டைப்பையில் இருந்த ரூ.2,600ஐ பறித்து, பைக்கில் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Related Stories: