×

சட்டமன்ற தேர்தலில் தன்னை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு கே.என்.நேரு நன்றி

திருச்சி, மே 18: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு பேராதரவு அளித்து வெற்றி பெறச்செய்த மேற்கு தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு நேற்று நன்றி தெரிவித்தார். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற துணைத் தலைவருமான கே.என்.நேரு தனது தொகுதிக்கு உட்பட்ட சண்முகா நகர், வயலூர் ரோடு, கொடாப்பு, குமரன் நகர், சீனிவாசன் நகர், ராமலிங்க நகர், நெசவாளர் காலனி, கல்லாங்காடு, பேங்க் காலனி, தேவர் காலனி,

பாரதி நகர், சத்யா நகர், ஆழ்வார் தோப்பு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அவருடன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கமல், முஸ்தபா நாகராஜ், கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் விஜயா, டோல்கேட் சுப்பிரமணி, சோழன், சம்பத், முத்து, பழனி, தகவல் தொழில் நுட்ப அணி அருண், கோவிந்தன், வக்கீல்கள் ஓம் பிரகாஷ், அந்தோணி, சதீஷ் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

 

Tags : K.N. Nehru ,Trichy ,DMK General Secretary ,West ,Trichy West ,
× RELATED ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு