திருத்துறைப்பூண்டி, மே 18: திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீராலத்தூர் ஊராட்சியில் உலகபுகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனிக்கிழமைகளில் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்,
குறிப்பாக, சனிக்கிழமை என்பது பொங்கு சனீஸ்வரருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கு சனீஸ்வரனை வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
