×

திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலக வளாகத்தில் சேதம் அடைந்த டவர் அப்புறப்படுத்த வேண்டும்

திருத்துறைப்பூண்டி, மே 18: திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலக வளாகத்தில் சேதம் அடைந்த டவரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்ட கலெக்டராக உமாசங்கர் இருந்த போது திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலக வளாகத்தில் முதல் கணினி மாவட்டம் அறிவிக்கப்பட்ட போது டவர் வைக்கப்பட்டது. டவர் வைக்கப்பட்டு 26 ஆண்டுகள் ஆகிறது.

அது சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது. தற்போது அந்த டவர் பயன்யற்ற நிலையில் சேதம் அடைந்துள்ளது. டவர் கொஞ்ச கொஞ்சமாக கீழே விழும் நிலையில் உள்ளது. எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளது. எனவே திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலக வளாகத்தில் சேதம் அடைந்துள்ள டவர் அப்புறப்படுத்த வேண்டும். பாதிப்பு இல்லாமல் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Thiruthuraipoondi ,Thiruthuraipoondi taluka ,Umashankar ,Thiruvarur District Collector ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்