- தமிழ் பல்கலைக்கழக வளாகம் குடியிருப்பாள
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் வட்டம்
- பிள்ளையார்பட்டி
- கிராமம்
- தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம்
- குடியிருப்பாளர்கள் நலன்
- சங்கம்
- ஜனாதிபதி
- குருமூர்த்தி
- மாருதமுட்டு
- வீரமோகன்
- ராஜன்
தஞ்சாவூர், மே 18: தஞ்சாவூர் வட்டம் பிள்ளையார்பட்டி கிராமம் தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் குருமூர்த்தி தலைமையில் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மருதமுத்து வரவேற்புரை ஆற்றினார். வீரமோகன் இரங்கல் தீர்மானமும், ராஜன் நிதிநிலை அறிக்கையும் வாசி த்தனர். சுந்தரம் சீதா லெட்சுமி, சுந்தரி மணி மன்னன், முத்து கிருஷ்ணன், முத்து ராமலிங்கம், சேவியர், ராமதாஸ், முனைவர் முரு கேசன், சிவசாமி, முன்னாள் படைவீரர் மணிவண்ணன், செல்லதுரை, சாமிநாதன், முனியப்பன் மற்றும் சாமித்துரை ஆகியோர் கருத்துக்களை தெரிவி த்தனர். முடிவில் சிவசாமி நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் 15.8.2026 அன்று சுதந்திர தின விழாவில் 2025-26ம் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ மற்றும் ஸ்டேட் போர்டு பிரிவில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அமரர் பீட்டர் சுகுமாரன் அறக்க ட்டளை மூலமாக கௌ ரவித்தல் மற்றும் ஆண்களு க்கு விளையாட்டுப் போட்டி நடத்தி வெற்றி பெறு பவர்களுக்கு பரிசு வழங்குதல், 4-ம் ஆண்டு பொதுக்குழு நடத்துதல், செப்டம்பர் 2025 முதல் ஆகஸ்டு 2026 முடியவுள்ள காலத்தில் பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களை கௌரவித்தல் மற்றும் உணவுத் திருவிழா நடத்துதல் போன்ற ஐம்பெரும் விழாவாக நடத்திட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மூன்று மகளிர் உட்பட 25 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
