- சுப்ரமணிய சுவாமி
- பிரம்மபுரீஸ்வரர் கோவில்
- பெரம்பலூர்
- ஸ்ரீவள்ளி
- ஸ்ரீ தெய்வானை
- ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
- கோவில்
- ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில்
- ஸ்ரீ
- அகிலாண்டேஸ்வரி
- துறையூர் சாலை
பெரம்பலூர்,மே 18: பெரம்பலூர் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி, துறையூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக் கோயிலில் நேற்று வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு காலை 11:00 மணியளவில் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு, மூலவர் மற்றும் உற்சவங்களுக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ராஜமாணிக்கம் மற்றும் பெரம்பலூர் அரணாரை, துறைமங்கலம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் மற்றும் கிருத்திகை வழிபாட்டு குழுவினர் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர். பூஜைகளை முல்லை மற்றும் கௌரிசங்கர் சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர்(பொ) அசனாம்பிகை செய்திருந்தார்.
