2 ஜேசிபி பறிமுதல்

பரமக்குடி, மார்ச் 2:  பரமக்குடி அருகே கண்மாயில் அனுமதியின்றி, மணல் அள்ளியதற்கு பயன்படுத்தப்பட்ட 2 ஜேசிபி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  பரமக்குடி புறநகர் பகுதிகளான கமுதக்குடி, உரப்புளி,தென்பொதுவக்குடி, புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தென் பொதுவக்குடி பகுதியில் உள்ள கண்மாயில், ஜேசிபி மூலம் டிப்பர் லாரிகளில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பரமக்குடி தாலுகா போலீசார் கொள்ளையர்கள் லாரியுடன் தப்பிச் சென்றனர். ஜேசிபியை விட்டு விட்டு ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து 2 ஜேசிபியை பறிமுதல் செய்தனர். மணல் கொள்ளை சம்பவங்களுக்கு மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறும் நிலையில்,போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: