×

நத்தம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

 

நத்தம், மே 18: நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டியை சேர்ந்தவர் செழியன். இவரது மகன் கிஷோர் பாண்டியன் (17). செழியன் இறந்து விட்டதால், அவரது இருசக்கர வாகன சர்வீஸ் சென்டரை கிஷோர் பாண்டியன் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சர்வீஸ் சென்டரில் கிஷோர் பாண்டியன், ஒரு டூவீலரை தண்ணீரால் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் கிஷோர் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Natham ,Chezhiyan ,Avichipatti ,Kishore Pandian ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்