மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

பரமக்குடி, மார்ச் 2:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி, போகலூர் ஒன்றிய திமுக பொருளாளர் குணசேகரன் சார்பில், மஞ்சூர் மற்றும் பொட்டிதட்டி பகுதிகளில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்தியா குணசேகரன் தலைமை வகித்தார். அப்போது, மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், பொட்டி தட்டி ஊராட்சி தலைவர் சரவணக்குமார்,  மஞ்சூர் சாத்தையா, கிளைச் செயலாளர் பால்ராஜ், திமுக நிர்வாகிகள் ஆட்டோ சரவணகுமார், மாவட்ட பிரதிநிதி தனிக்கொடி, பொட்டிதட்டி  கிளைச்செயலாளர் வன்னி, முன்னாள் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முத்தரசு, வழக்கறிஞர் பாலமுருகன்முருகன்,ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: