தனியார்மயமாக்கலை கண்டித்து வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

மதுரை, மார்ச் 2: வங்கிகள் தனியார்மயமாக்கலை கண்டித்து ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். பொதுத்துறை வங்கிகளில் மக்களின் சேமிப்பு ரூ.145 கோடி உள்ளது. இவற்றை தனியார் மயமாக்கினால் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்கள்நல திட்டங்களுக்கும் பயன்பட்டு வந்த சேமிப்பு இனி கேள்விக்குறியாகிவிடும். எனவே பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

மேலும், பிரதமருக்கு மனு அனுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.மதுரை அண்ணாநகரில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. ஏஐபிஇஏ தலைவர் தர் தலைமை வகித்தார். ஏஐபிஓசி தலைவர் செந்தில்ரமேஷ், என்சிபிஇ தலைவர் பரதன், ஏஐபிஓஏ தலைவர் ஜோசப்சகாயடெல்வர், பிஇஏஎப்ஐ தலைவர்

சண்முகநாதன், ஐஎன்பிஓசி தலைவர் செல்வபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஏஐபிஓசி பாலாஜி, பிஎஸ்என்எல்இயு செல்வின்சத்தியராஜ், எல்ஐசிஇயு மீனாட்சிசுந்தரம், ஜிஐஇஏ ரமேஷ் மற்றும் ஐடிஇஎப் ஷ்யாம்நாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: