தேர்தல் ஆலோசனை கூட்டம்

திருப்பரங்குன்றம், மார்ச் 2: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் அதிகாரியுமான முருகேஸ்வரி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் உதவி தேர்தல் அதிகாரியும் திருப்பரங்குன்றம் தாசில்தாருமான மூர்த்தி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மாற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். இதில் பாரபட்சம் இன்றி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மூன்று குழுக்கள் அடங்கிய பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

இதில், பறக்கும்படை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாகன சோதனை, அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் வகையில் சோதனைகளை மேற்கொள்வர். நிலைக்குழுவை சேர்ந்தவர்கள் சோதனை சாவடி உள்ள இடங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். வீடியோ கண்காணிப்பு குழுவினர் அரசியல் கட்சியினரின் கூட்டம், கட்சி நிகழ்ச்சி ஆகியவற்றை கண்காணிப்பர். மேலும் தொகுதியில் உள்ள 32 மண்டலங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 295 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் 458 ஆக உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: