தேர்தல் முடியும் வரை மதுக்கடைகள் நேரத்தை குறைக்க வலியுறுத்தல்

மதுரை, மார்ச் 2: தேர்தல் முடியும் வரை மதுக்கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாக டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. இரவு 10 மணிக்கு பிறகு கடையை அடைத்துவிட்டு, உள்ளே அமர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் அன்றைய விற்பனையை கணக்கிடுவர். இந்த பணி முடிய இரவு 11 மணியாகி விடும். தற்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சியினர் இரவு 10 மணி வரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு மதுக்கடைகளுக்கு வருவர். அப்போது கதவை தட்டி திறக்கச்சொல்லி வற்புறுத்துவர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் பிரச்னையை சந்திக்க நேரிடும். எனவே இரவு 10 மணிக்கு பதிலாக முன்கூட்டியே 8 மணிக்கு கடையை அடைத்துவிட உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக தேர்தல் ஆணையத்திடம் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Related Stories: