சரக்கு வேன் கவிழ்ந்து 9 பேர் காயம்'

திண்டுக்கல், மார்ச் 2: வேடசந்தூர் அருகே அய்யலூர் முடுக்குபட்டியை சேர்ந்தவர் ராமர் (31). இவர் நேற்று தனது சரக்கு வேனில் சிறுமலை தென்பகுதியில் இருந்து காய்கறிகளை ஏற்றி கொண்டு திண்டுக்கல் நோக்கி வந்தார். சிறுமலை முதல் கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் டிரைவர் ராமர், கிளீனர் முருகன் உள்பட 9 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் அனைவரையும் மீட்டு திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>