தேர்தல் குறித்த அனைத்து அனுமதிக்கும் 48 மணிநேரம் முன் விண்ணப்பிக்க வேண்டும் ஆணையம் அதிரடி

திண்டுக்கல், மார்ச் 2: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினருக்கு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் ஒன்றாக தேர்தல் சம்பந்தமான அனைத்து அனுமதிக்கும் அரசியல் கட்சிகள் இணையதளம் வாயிலாக 48 மணிநேரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக இச்செயல்பாடு முக்கியமாக கருத்தப்படுகிறது என்றும், இதனை அனைத்து கட்சிகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரசாரம், பொது கூட்டங்கள், வாகனம்,  ஒலிப்பெருக்கி உள்ளிட்ட அனைத்து அனுமதிக்கு https : suvidha.eci.gov.in/login என்ற இணையதளம் மூலமாக 48 மணிநேரத்திற்கு முன்னதாக அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து விண்ணப்பித்து அனுமதி பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>