அடகு கடைகளில் ஆவணங்கள் அவசியம் பழநி கோட்டாட்சியர் உத்தரவு

பழநி, மார்ச் 2:தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்வது, தொகுதி ஒதுக்கீடு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுபோல் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அமல்படுத்தி வருகின்றது. இதன்படி நேற்று பழநி கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள், அடகுக்கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் அசோகன் தலைமை வகிக்க,. தாசில்தர் வடிவேல் முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அச்சகங்களில் முகவரி இல்லாமல் போஸ்டர் அடிக்க கூடாது. உரிய பில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். திருமண மண்டபங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது. கட்சிக்கொடிகள், அரசியல் தலைவர்களின் படங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதிக்க கூடாது. நகை கடை, அடகு கடைகளில் உள்ள பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். பணம் விநியோகத்திற்கு உடந்தையாக இருக்க கூடாது. உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்ல கூடாது. சரியான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பிடிபட்டால் தேர்தல் முடிந்த பின்னரே உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திரும்பப் பெற முடியுமென அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: