இளம்பெண் தற்கொலை

செய்யாறு, மார்ச் 2: செய்யாறு அடுத்த மோரணம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(30), செய்யாறு சிப்காட் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா(25), இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. ஒன்றரை வயதில் வசந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்று முன்தினம் மதியமும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த திவ்யா, வீட்டின் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திவ்யாவின் அக்கா கணவர் பிரகாஷ் மோரணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்தார். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் செய்யாறு ஆர்டிஓ விஜயராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>