ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை சுகாதார இணை இயக்குனர் ஆய்வு

ஆரணி, மார்ச் 2: ஆரணி அரசு மருத்துவமனையில் 45 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கண்ணகி, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், 45 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும், பாதிப்புகளும் ஏற்படாது. இதில் குறிப்பாக ரத்த அழுத்தம், ஆஸ்த்துமா, சக்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தடுப்பூசி செலுத்தி கொள்ளவது அவசியம். அரசு மருத்தவமனைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும்,

அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நபர்கள் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றை காட்டாயம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து நேற்று மட்டும் ஆரணி அரசு மருத்துவமனையில் 51 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதேபோல் எஸ்வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது, முதன்மை மருத்துவ அலுவலர் மம்தா, தலைமை செவிலியர் சாரதி, முத்த செவிலியர்கள் ஸ்டீபன், ஜெகன், செல்லமாணிக்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: