தேர்தல் நடத்தை விதிமுறைகளால் கொடிக்கம்பங்கள், போஸ்டர்கள் அகற்றம்

செய்யாறு, மார்ச் 2: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் செய்யாறில் தேர்தல் நடத்தும் அலுவலர் என்.விஜயராஜ் ஆலோசனையின் படி கொடிக்கம்பங்கள், போஸ்டர்கள் அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த பிப்.26ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அறிவித்து இருந்தது. அதன் படி திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி (68) தேர்தல் நடத்தும் அலுவலராக என்.விஜயராஜை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்டிஓவுமான என்.விஜயராஜ் ஆலோசனைப்படி மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர், காவலர், பெண் காவலர் ஆகியோர் கொண்ட குழு அடங்கிய பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் நகரப்பகுதியிலும், கிராமப்புறங்களிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அரசியல் விளம்பரம், சுவரொட்டிகள், போஸ்டர்கள், பேனர்கள், கொடிக்கம்பங்கள் அகற்றி வருகின்றனர். மேலும், அரசியல் கட்சித்தலைவர்களின் சிலைகளை பத்திரமாக துணியால் மூடி மறைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>