×

எக்ஸ்பிரஸ் ரயிலில் தொழிலாளியிடம் 1.4 கிலோ தங்க நகைகள் கொள்ளை

நாகர்கோவில்: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜோஸ் (47). பிரபல தங்க நகைகள் தயாரிப்பு தொழிற்கூடத்தில் பணியாற்றி வருகிறார். இவர், நாகர்கோவில், திருநெல்வேலி, வள்ளியூர் பகுதிகளில் உள்ள நகை கடைகளுக்கு கொடுப்பதற்காக 1 கிலோ 400 கிராம் தங்க நகைகளை ஒரு பேக்கில் எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சூரில் ஏறினார்.

நேற்று காலை 6.30க்கு ரயில் குமரி மாவட்டம், குழித்துறை ரயில் நிலையம் வந்தபோது கண் விழித்தவர், நகை பேக்கை ஒருவர் எடுத்து கொண்டு வேகமாக ஓடுவதை பார்த்தாராம். புகாரின்படி குழித்துறை ரயில்வே போலீசார் வழக்குபதிந்து கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், ஜோஸ் கூறும் தகவல்கள் உண்மைதானா என்றும் விசாரிக்கின்றனர்.

Tags : Nagercoil ,Jose ,Thrissur, Kerala ,Tirunelveli ,Valliyur ,
× RELATED தெலங்கானாவில் பயங்கரம்; காதலியின்...