கோவில்பட்டியில் மாநில கபடி போட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி, மார்ச் 2: கோவில்பட்டியில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். கனகு நினைவு சரணாலயம் மற்றும் வேலுநாச்சியார் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி கோவில்பட்டி காந்திநகர் மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது. மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் நிறுவனர் செல்வத்தேவர் தலைமை வகித்தார். கவுன்சிலர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டியன் வரவேற்றார்.  அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விளாத்திகுளம் பிரண்ட்ஸ் கிளப் அணிக்கு முதல் பரிசு ரூ.20001ஐ அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். 2வது பரிசு சாத்தூர் ராஜா ஸ்போர்ட்ஸ் கிளப், 3வது பரிசு கோவில்பட்டி கனகு நினைவு சரணாலயம், 4ம் பரிசு எட்டயபுரம் பிஎம்டி கபடி குழு, 5ம் பரிசு கரிசல்குளம் விஎன்ஆர் வேலுநாச்சியார், 6ம் பரிசு சாத்தூர் பாண்டி கருனேயா, 7ம் பரிசு மேட்டமலை செல்வியாரம்மன், 8ம் பரிசு மந்தித்தோப்பு வெள்ளைரோஜா அணிகளும் பெற்றன. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், புதுப்பட்டி ராஜேஸ்வரன், ராமச்சந்திரன் அகமுடையார், ராசுப்பாண்டியன், குருசாமிபாண்டியன், தங்கராசுபாண்டியன், மாடசாமி, அய்யாத்துரைபாண்டியன், மாவட்ட அமெச்சூர் கபடி கழக இணைச் செயலாளர் பரதன், சண்முகவேல்பாண்டியன், ராஜவேல், பாஜ வணிகர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: