மழையால் தேயிலை மகசூல் அதிகரிப்பு பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்குமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி : கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்தை நம்பி பெரும்பாலான தேயிலை தோட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். தற்போது, அவ்வப்போது இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிக விளைச்சல் இருக்கும் தற்போதைய சூழலில் அதிக மகசூல் காரணமாக தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேயிலைக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என சிறு, குறு தேயிலை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். மேலும் தற்போது பசுந்தேயிலை விளைச்சல் அதிகம் இருப்பதால் தேயிலைக்கு உரிய விலை கிடைத்திடவும், காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை தோட்டங்களில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் பசுந்தேயிலைகளில் கொப்பல நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று தேயிலை விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து எதிர்பார்த்து வருகின்றனர்.

Related Stories: