×

நெல்லையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை

நெல்லை, மார்ச் 2:  நெல்லை மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து உடனுக்குடன் பதிவு செய்து தீர்வு காண வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் நிலையான கண்காணிப்பு குழுக்கள்,  பறக்கும் படையினர் என 30 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெல்லை ராஜகோபாலபுரம், மேலப்பாளையம்  கருங்குளம் ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினரின் வாகன சோதனையை கலெக்டர் விஷ்ணு ஆய்வு  செய்தார். அப்போது பணம் பறிமுதல் தொடர்பான விதிமுறைகளை அதிகாரிகளிடம்  கேட்டு ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்  தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார். தேர்தல்  விதிமுறை மீறல் தொடர்பாக 1950 மற்றும் 18004258373 ஆகிய எண்களுக்கு வரும்  புகார்கள் குறித்து உரிய முறையில் பதிவு செய்து நடவடிக்கை  எடுக்கப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார். மாவட்ட ஆதிதிராவிடர் நல  அலுவலர் தியாகராஜன், பிஆர்ஓ நவாஸ்கான், தாசில்தார்கள் மோகன், ெலட்சுமி  ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!