கேரள பகுதியில் மீன்பிடிக்க சென்றபோது தவறிவிழுந்து கடலில் மூழ்கிய மீனவர் உடலை மீட்டுத்தர வேண்டும் இன்பதுரை எம்எல்ஏ கோரிக்கை

பணகுடி, மார்ச் 2: கேரள பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது தவறிவிழுந்து கடலில் மூழ்கிய செட்டிகுளம் மீனவர் உடலை மீட்டுத்தர வேண்டும் என நெல்லை கலெக்டரிடம் இன்பதுரை எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கலெக்டர் விஷ்ணுவிடம்  அளித்துள்ள மனு விவரம்: நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதி செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (55). மீன்பிடி தொழிலாளியான இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க படகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்து கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேப்பூர் மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சுயம்புலிங்கத்துடன் மீன்பிடிக்கச் சென்ற சக மீனவர் செல்வகுமார் என்பவர் சுயம்புலிங்கத்தின் மனைவி கலைச்செல்வி, மகள்கள் கவுசல்யா,  தீபா, மகன்கள் சபரீசன், சுபாஷ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுததோடு தீராத சோகத்தில் உள்ளனர். எனவே, ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த மீனவர் சுயம்புலிங்கம்  உடலை மீட்பதோடு அவரது சொந்தஊருக்கு கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>