பாவூர்சத்திரம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தேர்வு 106 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

பாவூர்சத்திரம், மார்ச் 2: பாவூர்சத்திரம்  எம்எஸ்பி வேலாயுத  நாடார் லட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில்  நடந்த  நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்ற 106 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

 பாவூர்சத்திரம் எம்எஸ்பி வேலாயுத நாடார் லெட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல்  மற்றும்  ஆட்டோமொபைல்  இன்ஜினியரிங்  இறுதி ஆண்டு  பயிலும்  மாணவர்களுக்கு  வேலைவாய்ப்புக்கான  நேர்முகத்  தேர்வு  நடந்தது. சென்னை பாடி பிரேக் இந்தியா  நிறுவன மனித மேலாளர் ரங்கநாதன், துணை மேலாளர்கள் உமாஸ்கந்தன், உதவி மேலாளர்கள் ராம்பிரசாத், கிருஷ்ணமூர்த்தி, உமாபதி, அலுவலர் பார்த்தசாரதி, பயிற்சியாளர் அனுசியா உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வளாகத் தேர்வை நடத்தினர். இதில் தேர்வான 106 பேருக்கு பணி நியமன ஆணைகள் உடனடியாக  வழங்கப்பட்டன. தேர்வுபெற்ற   மாணவர்களை   கல்லூரித் தாளாளர் எம்.எஸ்.பி.வி காளியப்பன்,  ஆலோசகர் பாலசுப்பிரமணியன்,  முதல்வர் ரமேஷ், அனைத்துத் துறைத்தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் பாராட்டினர். ஏற்பாடுகளை  கல்லூரியின்  வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>