அடைக்கலபட்டணம் எஸ்எம்ஏ பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

நெல்லை, மார்ச் 2: இயற்பியல் மேதை சர்சிவி ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகிற்கு அறிவித்த நாளளான பிப்.28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு மேதைகளை பெருமைபடுத்தும் வகையில், புதிய அறிவியல் சிந்தனையை உருவாக்கும் விதமாக எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அறிவியல் மாதிரிகளை தயாரித்து காட்சிப்படுத்தினர்.

 கொரோனா நோய்த் தொற்று மற்றும் உலகளாவிய பாதிப்பு ஏற்படுத்திய நோய்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகளின் காணொளி விளக்கக் காட்சி இடம் பெற்றது. ராமன் விளைவு என்றால் என்ன? சர்சிவி ராமன் செய்த ஆராய்ச்சி ஆகியவற்றை மாணவ, மாணவிகள் விளக்கினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். அகாடமிக் டைரக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் பாகீரதி, கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>