வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

வீரவநல்லூர், மார்ச் 2: சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளத்தில் மெயின்ரோட்டில் இந்தியன் வங்கிக் கிளையும் அதன் வளாகத்திலேயே அவ்வங்கியின் ஏ.டி.எம்.மும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏடிஎம் அறைக்குள் நேற்று  முன்தினம் அதிகாலை 2.15 மணிக்கு புகுந்த மர்மநபர் அங்கிருந்த சிசிடிவி  கேமரா மற்றும் அலாரத்தை உடைத்தெறிந்து கோடாரி போன்ற கூர்மையான ஆயுதத்தால்  ஏ.எடி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளார். முயற்சி தோல்வியடையவே  மர்மநபர் தப்பிச்சென்றுள்ளார்.  இதுகுறித்து காலை தகவலறிந்ததும்  அம்பை டிஎஸ்பி பிரான்ஸ்சிஸ், சேரன்மகாதேவி எஸ்.ஐ  சிவதாணு மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Related Stories:

>