×

தஞ்சையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை

தஞ்சை, மார்ச் 2: தஞ்சையில் நடந்து வரும் கண்காணிப்புக்குழு வாகன தணிக்கையை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை கும்பகோணம் சாலை கரந்தை கோடியம்மன்கோயில், பட்டுக்கோட்டை புறவழிச்சாலை ஆகிய இடங்களில் உள்ள நிலையான கண்காணிப்புக்குழு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் பணிகளை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தஞ்சை, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், பேராவூரணி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய 8 சட்டமன்ற தொகுதி தேர்தல் நன்னடத்தை விதிகள் கடைப்பிடிப்பதை கண்காணிக்கும் வகையில் 24 பறக்கும் வடை, 24 நிலையான கண்காணிப்புக்குழு வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வேட்புமனு தாக்கல் நெருங்கி வருவதையொட்டியும், தேர்தல் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அதிக அளவு கவனமெடுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இக்காலக்கட்டத்தில் பறக்கும் படை அலுவலர்கள் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், நிலையான கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட பகுதிகளில் ஆம்னி பேருந்து, மணல் லாரிகள், பயணிகள் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் தீவிரமாக தணிக்கை செய்து வருகின்றனர். மேலும் வாகன தணிக்கையின்போது சரியான ஆவணங்கள் எதுவும் இன்றி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விசாரணை செய்து அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக பெறப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தொடர்பான புகார்களுக்கு மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1950 இலவச எண்ணிற்கு உடனுக்குடன் தகவல் அளிக்கலாம். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். அப்போது தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...