கொங்குநாடு உணவு திருவிழா

கொடைக்கானல், மே 16: கொடைக்கானலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடங்கியது. கொடைக்கானலில் விரைவில் மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக தமிழ்நாடு ஹோட்டலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கொங்கு நாடு உணவு திருவிழா நடைபெறுகிறது.

நம்மண், நம் உணவு, நம் பாரம்பரியம் என்ற தலைப்பில் கொங்கு நாடு உணவு வகைகளான பானகம், கொள்ளு சூப், வாழைப்பூ வடை, திணைரொட்டி, அரிசி பருப்பு சாதம், நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, கூட்டு வகைகள் உள்ளிட்ட 40 வகையான உணவுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியானது இன்றும், நாளை நடைபெறும் என தமிழ்நாடு ஹோட்டல் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Related Stories: