×

சாலை விபத்தில் 2 பேர் சாவு

துவரங்குறிச்சி, மே 16: திருச்சி மாவட்டம் எப்.கீழையூர் ஆதம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன்(58) மற்றும் அவரது மகள் இருவரும் டூவீலரில் தெத்தூர் சென்று விட்டு மீண்டும் விராலிமலைக்கு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் சமத்துவபுரத்தை சேர்ந்த கணேசன் (35) என்பவர் ஓட்டிவந்த டூவீலர் கிருஷ்ணன் ஓட்டிச் சென்ற டூவீலர் என இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

படுகாயம் அடைந்த கிருஷ்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோல கடந்த 4ம் தேதி முக்கண் பாலம் அருகே அரசு பேருந்தும் டூவீலரும் மோதிய விபத்தில் தயானந்தன் (17) சம்பவ இடத்திலேயே இறந்தார். டூவீலர் பின்னால் அமர்ந்து வந்த நிர்மல் குமார் (17) தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

 

Tags : Thuvarankurichi ,Krishnan ,F. Keezhayur Adampatti ,Trichy district ,Viralimalai ,Thettur ,Samathuvapuram ,Trichy-Madurai National Highway ,Samathuvapuram… ,
× RELATED ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு