×

துவரங்குறிச்சி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

துவரங்குறிச்சி,மே 16: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை தனியார் உணவகம் அருகே நேற்று அதிகாலை மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்தது. இதை அதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு குழுவிற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் சேகர் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பை சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு லாவகமாக பாம்பு பிடிப்பான் உதவியுடன் பிடித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Thuvarangurichi ,Thuvarangurichi Tiruchi-Madurai National Highway Private Restaurant ,Trichy District ,Tudarangurichi Fire Brigade ,
× RELATED ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு