திருத்துறைப்பூண்டியில் நேற்று காலை முதல் சாரல் மழை

திருத்துறைப்பூண்டி, மே 16: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடும்பலம், வேளூர், சிங்களாந்தி, பாமணி, கொக்காலாடி, மணலி, ஆலத்தம்பாடி, எழிலூர்,பள்ளங்கோவில், மடப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று முதல் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related Stories: