மாதாந்திர பராமரிப்பு பணி வலங்கைமான் பகுதியில் 19ம் தேதி மின் நிறுத்தம்

வலங்கைமான், மே 15: மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வலங்கைமான் சுற்று வட்டார பகுதியில் மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவாரூர் கட்டுமானம் உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: வலங்கைமான் துணை மின் நிலையத்தில் வரும் 19ம்தேதி செவ்வாய்கிழமை காலை முதல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட விருக்கிறது.

இதனால் 19ம்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வலங்கைமான், ஆண்டான்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, பட்டம், மருவத்தூர், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: