×

ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளியில் மது அருந்திய 2 பேர் கைது

ஜெயங்கொண்டம்,மே16: ஜெயங்கொண்டம் அருகே உள்ள வல்லம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து மது அருந்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் குவாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தினுள் சில சமூக விரோதிகள் உள்ளே சென்று மது அருந்தி வருவதாக தகவல் பெறப்பட்டதை அடுத்து போலீசார் திடீர் தணிக்கை ஈடுபட்டனர்.

அப்போது சிலர் அத்துமீறி பள்ளியில் நுழைந்து மது அருந்திவிட்டு பாட்டிலை உடைத்து விட்டு சென்ற இரு நபர்கள் மீது குவாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை மகன் சிவா (29) என்பதும் மற்றொருவர் காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நேரு மகன் கோபிநாத் (29) என்பதும் தெரிய வந்தது. அவ்விருவரையும் குவாகம் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.

 

Tags : Jayankondam ,Vallam ,Vallam Government Middle School ,Kuvagam police station ,Ariyalur district ,
× RELATED சிறுவளூர் கிராமத்தில் அறுவடை பின்சார் தொழில்நுட்ப பயிற்சி