பெரம்பலூர், மே 16: பெரம்பலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு, எதிர் கட்சிகளை ஒடுக்குவதற்காக சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் என்பவருக்கு வழங்கப் பட்ட ஓராண்டு பதவி நீட்டிப்பை கண்டித்தும், நீட்தேர்வை ரத்து செய்து, மாநிலஅரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க மறுக்கிற மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று (15ம்தேதி) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன்படி நேற்று பகல் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி சிலை முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் கலந்து கொண்டனர்.
