உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் பெரியார் சிலை அவமதிப்பு திகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சை, மார்ச் 2: ஒரத்தநாட்டில் பெரியார் சிலையை அவமதித்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரத்தநாட்டில் தந்தை பெரியார் சிலையில் காவி துண்டு, தலையில் தொப்பியை மர்ம நபர்கள் அணிவித்துவிட்டு ஓடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த திகவினர் ஏராளமானோர் அவ்விடத்தில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மனநோயால் பாதித்த பெண் தான் இச்செயலில் ஈடுபட்டது என தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை தந்தை பெரியார் சிலை முன் ஒரத்தநாடு ஒன்றிய திக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலை உட்பட பெருந்தலைவர்கள் சிலைகள் அவமதிக்கும்போதெல்லாம் அதற்கு காரணம் மனநோயாளி என அடையாளப்படுத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனவே ஒரத்தநாட்டில் பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Related Stories:

>