கருப்பு அங்கி அணியும் போலி வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவலை

புதுடெல்லி: மூத்த வழக்கறிஞர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. இந்த நிலையில் அதனை அமல்படுத்துவதில் டெல்லி உயர்நீதிமன்றம் காலதாமதம் செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி,\\” வழக்கறிஞர்கள் அணியும் கருப்பு அங்கியை ஆயிரக்கணக்கான போலி வழக்கறிஞர்கள் அணிந்து கொண்டு சுற்றுவது என்பது மிகவும் கலவையாக உள்ளது. மேலும் போலியான வழக்கறிஞர்கள் பட்டங்களுடன் கருப்பு அங்கி அணிந்து கொண்டு பலர் சுற்றும் நிலையில் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்துவது தான் சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்து, மனுவை திரும்பப்பெற மனுதாரருக்கு அனுமதி வழங்கி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: