தேர்தல் நேரத்தில் போலீசாரின் அலட்சியத்தால் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை

திருப்பூர்,  மார்ச் 2: தேர்தல் நேரத்தில் போலீசாரின் மெத்தன போக்கினால் ஏடிஎம்  இயந்திரம் கொள்ளை நிகழ்ந்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர்  ரவி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் கலெக்டர் முன்பு நேற்று  குற்றம்சாட்டினார்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில்  நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட  கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் தலைமையில்  நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ஜ., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   இதில் இந்திய கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ரவி  பேசுைகயில், ‘‘திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள  சூழலில் அ.தி.மு.க. கட்சியினரின் விளம்பர பதாகைகளை அகற்றுவதில் தேர்தல்  அலுவலர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர். அ.தி.மு.க.வின் விளம்பர பதாகைகள்  அகற்றப்படாமல் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பார்வையில் படும்படி உள்ளன’ண’ என்றார். இதற்கு அ.தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட கண்ணபிரான்  பதிலளிக்க முற்பட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  

உடனடியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு சமரசம் செய்து வைத்ததுடன் ஆலோசனைகளை  கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார் . இதைத்தொடர்ந்து  ரவி பேசுகையில், ‘‘திருப்பூரில் தேர்தல் விதி அமலில் உள்ளபோது போலீசார்  தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளதாக காட்டிக்கொள்கின்றனர். ஆனால், டூவீலரில் செல்லும் அப்பாவி மக்களை பிடித்து அவர்களது உடமைகளை சோதனை  செய்வதுடன், கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்கின்றனர். அதே  நேரத்தில் கட்டுப்பாடுகளுடன் இருப்பதாக காட்டிக்கொள்ளும் போலீசார்  மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பிரதான ரோட்டில் அமைந்திருந்த ஏடிஎம்  மையத்தில் இருந்து இயந்திரத்தையே கட்டி இழுத்துச்சென்ற குற்றவாளிகளை  பிடிக்காமல் மெத்தனப்போக்கில் செயல்பட்டிருக்கும் சம்பவம் 28ம் தேதி  அரங்கேறி உள்ளது. எனவே போலீசார் கண்ணும் கருத்துமாக  பணியாற்றுவதுடன் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் தங்கள் பணிகளை செய்யவேண்டும்.  அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை வழிநடத்துதல் அவசியமாக  உள்ளது’’ என்றார்.

Related Stories: