கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்த போது, புதுப்பாளையத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கடற்கரைக்கு சென்றார்கள். இந்நிலையில் வெள்ளி கடற்கரையில் இடியும் மின்னலுமாக ஒரே நேரத்தில் அதிக அளவில் மழை பெய்தது.
அந்த நேரத்தில் புதுப்பாளையத்தை சேர்ந்த ஹரிஹரன், விஷால் மற்றும் ரவி வெள்ளி கடற்கரையில் செல்ஃபி எடுப்பதும் மற்றும் தொலைபேசியில் பேசி கொண்டும் இருந்திருக்கிறார்கள்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஷால் மற்றும் ரவி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தார்கள். இந்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடற்கரையில் இருந்து படுகாயம் அடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மழை பெய்யும்போது கடற்கரைக்கு யாரும் வர வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
