×

திருப்பூர் மாநகர பகுதியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திருப்பூர், மார்ச் 2: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 68வது பிறந்தநாள் விழா திருப்பூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட வடக்கு மாநகர இளைஞரணி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.  வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஆர்.முத்துக்குமார் தலைமை வகித்தார். 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பெரியார்காலனியில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராம்குமார், துணை அமைப்பாளர் ராஜ், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் ஆனந்த், வட்ட செயலாளர் ரத்தினசாமி மற்றும் நிர்வாகிகள் வேலுசாமி, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பாண்டியன் நகரில், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் அன்னதானம், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன் தலைமையில் பழைய பஸ் நிலையம் அருகில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி, இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜ் தலைமையில் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Tags : MK Stalin ,Tirupur metropolitan ,
× RELATED கீழக்கரை பகுதிக்கு பாதாள சாக்கடை...