ராமேஸ்வரம் கோயிவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பிரசாத லட்டு விற்பனையில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவிலில் இலவசமாக வழங்கப்படும் லட்டை கடைகளில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் கோவில் இணை ஆணையர் நடத்திய ஆய்வில் இந்த மோசடி அம்பலமானது. இதில் சமந்தப்பட்ட கோவில் ஊழியர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்களிடம் விற்பனை செய்யப்பட்டு வரும் கோவில் பிரசாத விற்பனையை கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து கோவில் நிர்வாகமே ஏற்று விற்பனை செய்து வந்துள்ளது. கடந்த 2023 மற்றும் 2024ஆம் நிதியாண்டில் சட்டப்பேரவை மாநில கோரிக்கையின் போது பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிசாதம் வழங்க திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது வரை இந்த திட்டமானது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கோவில் பிரசாத தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்த இளநிலை உதவியாளர் பஞ்சமூர்த்தி தினசரி பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுகளின் எண்ணிக்கையை குறைத்து அதனை முறைகேடாக பக்தர்களுக்கு விற்பனை செய்து சட்டவிரோதமாக பணம் ஈட்டிவந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை லட்டு பிரசாத தயரிப்பில் திடீரென ஆய்வு மேற்கொண்ட போது இந்த மோசடி அம்பலமானது. இதனை தொடர்ந்து சம்பத்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடந்தப்பட்டது. இதன் அடிப்படியில் இளநிலை உதவியாளர் பஞ்சமூர்த்தி தலைமையிலான ஊழியர்கள் செய்த பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

பஞ்சமூர்த்தி, கோயில் கணக்கில் காட்டாமல் சொந்தமாக மூலப்பொருட்களை வாங்கி லட்டுகளைத் தயாரித்து விற்று, அதன் மூலம் கிடைத்த வருவாயைத் தனது சொந்த கணக்கில் சேர்த்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2023 முதல் 2026 பிப்ரவரி மாதம் வரை 11 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக தயாரித்து விற்கப்பட்டுள்ளன.

 

Related Stories: