×

தேர்தல் விதிமீறல் குறித்து ‘சி- விஜில்’ செயலி மூலம் புகார் அளிக்கலாம்

திருப்பூர்,  மார்ச் 2: தேர்தல் கமிஷன் வாக்காளர் வசதிக்காக பல்வேறு வசதிகளை செய்து  வருகிறது. ‘டிஜிட்டல்’ புரட்சியை தேர்தல் கமிஷனும் பயன்படுத்தி வருகிறது.   ‘சி-  விஜில்’ என்ற செயலி் மூலம், முறைகேடு அல்லது விதிமீறல் காட்சியை போட்டோ  அல்லது வீடியோவாக பதிவேற்றலாம். அவ்வாறு செய்ததும் மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வைக்கு சென்றுவிடுகிறது. மாவட்ட  கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கிடைப்பதால், உடனடியாக பறக்கும் படையை  அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரம்  என்பதால் பொதுமக்கள் ‘சி-விஜில்’ என்ற செயலியை பதிவேற்றம் செய்து கொண்டு  தேர்தல் கமிஷன் பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்  அழைப்பு விடுத்துள்ளார்.

Tags :
× RELATED தேர்தல் புகார்களை அளிக்கும் சி-விஜில்...