×

வெயிலில் பணியாற்றும் போலீசாருக்கு நீர், மோர்

திருப்பூர், மார்ச் 2:  கோடை காலம் தொடங்கியதையடுத்து வெயிலில் பணிபுரியும் போலீசாருக்கு நீர்,மோர் வழங்கும் நிகழ்வை திருப்பூர், புஸ்பா தியேட்டர் பகுதியில் மாநகர போலீஸ் கமிஷனர் நேற்று தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து போலீசார் உட்பட பலர் கடும் வெயிலில் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. கோடை காலத்தில் கடும் வெயிலில் பணியாற்றும் போலீசாருக்கு நீர், மோர் மாநகர போலீஸ் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று புஸ்பா தியேட்டர் பகுதியில் வெயிலில் பணியாற்றும் போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நீர், மோர் வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இதில், மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல், துணை கமிஷனர்கள் வெற்றிவேந்தம், நவீன்குமார், கொடிசெல்வன்,  போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை