×

பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை

பழநி, மே 15: பழநி அருகே பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், குமரலிங்கம் அருகே மயிலாபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி வெள்ளத்தாய் (51). பசுபதிபுத்தூரில் உள்ள பேப்பர் மில்லில் கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று மில்லின் அருகில் உள்ள தனியார் முள்காட்டில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சாமிநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வெள்ளைத்தாய் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Palani ,Palaniswami ,Vellathai ,Mayilapuram ,Kumaralingam ,Tiruppur district ,Pasupathiputhur… ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்