நிலக்கோட்டை, மே 15: நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில், உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, விவசாயிகளுக்கு வேளாண் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக நதிகள் பாதுகாப்பு குழு மாநில இயக்குநர் அண்ணாதுரை தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூக்கடை சந்திரன் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை பூக்கடை சங்க பொறுப்பாளர் செல்வராஜ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பூ மார்க்கெட் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கியும், தமிழ்நாடு அரசு சார்பாக நறுமண பூச்செண்டு தொழிற்சாலையும் அமைத்துக் கொடுக்கவும், தற்போது நிலவும் உரத் தட்டுப்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பு பொருளாளர் இளங்கோ, முத்துக்காமன்பட்டி பொறுப்பாளர் அன்பு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
