×

2 சதவீத அகவிலைப்படி உயர்வு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பாராட்டு

திருவாரூர், மே 15: ஆசிரியர், அரசு அலுவலர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் பொதுச்செயலாளர் (பொ) ஈவேரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்குகின்ற போதெல்லாம் தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி வந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசு 2 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழக அரசும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி 60 சதவீதமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுவதற்கு முன்னரே பணிகளை தொடங்கி அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோல் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் மற்ற கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு ஈவேரா தெரிவித்துள்ளார்.

 

 

Tags : Primary School Teachers' Alliance ,Thiruvarur ,Tamil Nadu Primary School Teachers' Alliance ,Tamil Nadu government ,General Secretary ( ,P) Ewera ,government ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்